பெங்களூர் பாலியல் துன்புறுத்தல்: 4 பேர் கைது

share on:
Classic

பெங்களூருவில் சாலையில் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த ஜனவரி 1ம் தேதி பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலில் பதிவான சிசிடிவி காட்சிகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டது.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் இரவு நேரத்தில் பொது இடத்தில் மக்கள் கூடியபோது குடிபோதையில் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்றதாக கூறப்பட்டது.

மேலும் பல ஊடங்களிலும் இந்த செய்திகள் மற்றும் வீடியோ பதிவுகள் வெளியிடப்பட்டன. இந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்த கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இரவு நேரத்தில் தனியாக சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இரு ஆண்கள் நிகழ்த்திய பாலியல் துன்புறுத்தல் காட்சிகளைக் கொண்ட சிசிடிவி பதிவுகள் வெளியிடப்பட்டன. இது குறித்து போலீசார் 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஐய்யப்பா முக்கிய குற்றவாளி, மேலும் ரினோ, சம்சேகர், சுரேஷ் ஆகியோர் ஆவர்.

Loading...

jagadish