பெட்ரோல் பங்குகளில் கார்டு பயன்படுத்தினால் சேவை வரி கிடையாது - மத்திய அரசு

share on:
Classic

ஜனவரி 13ஆம் தேதிக்குப் பிறகும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கார்டுகள் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோல் பங்க்குகளில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் சேவை வரி கிடையாது என்றும், பெட்ரோல் பங்க்கில் கார்டு பயன்படுத்தினால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் கூறினார்.

மேலும், ஜனவரி 13ஆம் தேதிக்குப் பிறகும் கார்டுகள் மூலம் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பணம் செலுத்தலாம் என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

Loading...

vaitheeswaran