பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து

share on:
Classic

பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்த பொங்கல் திருநாள் புதிய நம்பிக்கையையும் முன்னேற்றத்துக்கான வழியையும் உருவாக்கட்டும் எனவும் தமிழக முதலமைச்சர் பன்னீர் செல்வம் மக்கள் அனைவருக்கும் தனது உளம் கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

திமுக செயல் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்து மடலில் இந்த பொங்கல் திருநாள் தமிழக மக்களுக்கு புதிய ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கட்டும் என தெரிவித்துள்ளார்.

இதேபோல் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் ஜி.ராமகிருஸ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன், தமாக தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் ஆகிய தலைவர்கள் தங்களது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Loading...

jagadish