பொன்வண்ணனின் ராஜினாமா கடிதத்தை ஏற்கமாட்டோம் :  நாசர் 

share on:
Classic

நடிகர் சங்கத் துணைத்தலைவர் பொன்வண்ணனின் ராஜினாமா கடிதத்தை ஏற்கமாட்டோம் என நடிகர் சங்கத்தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத் துணைத்தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகர் பொண்வண்ணன் கடிதம் அளித்திருந்தார். அதில் புதிய நிர்வாகம் அமைந்த போது எந்த கட்சியையும் சாராத நிர்வாகம் அமைய விரும்பியதாகவும், ஆர்.கே நகர் இடைத்தேர்தலில்  விஷால் வேட்புமனு தாக்கல் செய்த விவகாரத்தில்  கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் பொன்வண்ணன் அளித்த கடித்தில் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் நடிகர் சங்கம் அவரின் இந்த முடிவை ஏற்க மறுத்துள்ளது. ஆனால் பொன்வண்ணன் பதவி விலகும் முடிவை திரும்ப பெறப் போவதில்லை என அறிவித்துள்ளார். இது தொடர்பாக பொன்வண்ணனின் ராஜினாமா கடிதத்தை ஏற்க மாட்டோம் என நடிகர் சங்கத் தலைவர்  நாசர் கூறியுள்ளார்.

News Point One: 
நடிகர் சங்கத் துணைத்தலைவர் பதவியில் இருந்து பொண்வண்ணன் ராஜினாமா
News Point Two: 
ஆர்.கே நகரில் விஷால் வேட்புமனு தாக்கல் செய்த விவகாரத்தில் கருத்து வேறுபாடு
News Point Three: 
பொன்வண்ணனின் ராஜினாமா கடிதத்தை ஏற்கமாட்டோம் : நாசர்
News Counter: 
85
Loading...

Sathya