பொறியியல் படிப்பிற்கும் பொதுநுழைவுத் தேர்வு நடத்த ஆலோசனை

share on:
Classic

நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு பொதுவான நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் கூடவுள்ள தேசிய தொழில்நுட்ப கல்விக்கான கவுன்சில் கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதிக்க இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நுழைவுத் தேர்வானது நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்புகளைப் பொறுத்தவரை தற்போது மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு மட்டுமே ஜெஇஇ (JEE) எனப்படும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Loading...

jagadish