close
முகப்புபோக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை மத்தியஸ்தர் நியமனம் 

போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை மத்தியஸ்தர் நியமனம் 

January 11, 2018 289Views
போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை மத்தியஸ்தர் நியமனம் 

போக்குவரத்து தொழிலாளர் பேச்சுவார்த்தை தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற நீதிபதி மத்தியஸ்தராக நியமித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று தொழிற்சங்கங்கள் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தன.

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. தொழிற்சங்கங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், அரசு தற்போது அறிவித்துள்ள புதிய ஒப்பந்தமான 2 புள்ளி நான்கு 5 காரணியே இடைக்காலமாக ஏற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் தொழிற்சங்கள் கேட்ட 2 புள்ளி ஐந்து 7 காரணி வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உயர்நீதிமன்ற நீதிபதியை மத்தியஸ்தராக நியமித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. பால் வசந்தகுமார், சண்முகம், கே.என்.பாஷா ஆகியோரில் ஒருவரை மத்தியஸ்தராக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. 

போராட்ட காலத்தில் தொழிலாளர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது, தொழிலாளர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை அரசு ஏற்று கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், போக்குவரத்துறை செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைக்கு அரசு தயார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஆனால், வேலைநிறுத்த காலத்தில் சம்பளம் வழங்கப்படாது என்றும், வழக்குகள் திரும்பப் பெறப்படாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எஃப் எம் இப்ராஹிம் கலியுல்லாவை மத்தியஸ்தராக நியமிக்கமாறு அரசு தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் மத்தியஸ்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.