போராட்ட குழுவினருடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

share on:
Classic

கலாச்சார அடையாளமான ஜல்லிக்கட்டை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவால் கடந்த சில ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டை, இந்தாண்டு நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பினரும் எழுச்சியுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 பேர் கொண்ட குழுவினரை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அமைச்சர்கள் ஜெயக்குமார், மாபா பாண்டியராஜன் ஆகியோருடன் போராட்டக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும் என்றார்.

ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்ற குடியரசுத் தலைவரிடம் தமிழக அரசு வலியுறுத்தும் என்றும் அவர் உறுதி அளித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் மாபா பாண்டியராஜன், ஜல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்களின் உணர்வுகளுக்கு தமிழக அரசு மதிப்பளிப்பதாக தெரிவித்தார்.

அரசின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Loading...

jagadish