மதுரை: காமராஜ் பல்கலைக்கழக கபாடி போட்டிகள் துவக்கம்

share on:
Classic

மதுரை காமராஜ் பல்கலைக்கழக மண்டல அளவிலான ஆண்களுக்கான கபடி போட்டிகள் விருதுநகரில் நடைபெற்று வருகின்றன.

விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வரும் மண்டல அளவிலான கபடி போட்டிகளில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. முதலில் நடைபெற்ற லீக் போட்டிகளில் விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி அணி 48க்கு 18 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது.

மற்றொரு லீக் ஆட்டத்தில் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி மதுரை காமராஜ் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியை 33க்கு 25 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2 நாட்கள் நடக்கும் இந்த போட்டிகளில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.

Loading...

jagadish