மதுவுக்கு எதிரான பிரச்சார பயணத்தைத் தொடங்கினார் மேத்தா பட்கர்

share on:
Classic

கன்னியாகுமரியில் இருந்து போபால் வரை மது மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான வாகன விழிபுணர்வு பிரச்சார யாத்திரை காந்தி பிறந்த தினமான இன்று அவரது நினைவுமண்டபத்தில் இருந்து தொடங்கியது.

மதுவிலக்கு மற்றும் போதைப் பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி, நசமுத்தா பாராத் யாத்ரா காந்தியின் பிறந்த தினத்தில் அவரது நினைவு மண்டபத்தில் இருந்து அனைத்து மாநில அரசுகளுக்கும் கோரிக்கையாக தங்களது இந்த புனித பயணம் தொடங்குவதாக சமூக சேவகி மேத்தா பட்கர் தெரிவித்தார்.

காவிரி விவகாரத்தில், நீதிமன்றம் தலையிட்டு தீர்வு காண்பது என்பது இரு மாநில அரசுகளுக்கிடையே ஒற்றுமையின்மைக்கு வழிவகுக்கும் என்று கூறிய அவர், கர்நாடக அரசு தொடர்ந்து தடுப்பணை கட்டுவது தாழ்வான பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதை தடுப்பதாக கூறினார்.

கர்நாடக அரசு, தொடந்து தடுப்பணைகளைக் கட்டிகொண்டிருந்தால், தமிழகத்தில் விவசாயம் பொய்த்து போகும் என்றார்.

இது, தமிழகத்திற்கு மட்டுமல்ல என்றும், எந்த மாநிலத்தின் நதிகளில் தடுப்பணை கட்டினாலும், தாழ்வான பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்படும் எனவும் மேத்தா பட்கர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ,பச்சை தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த சுப உதயகுமார், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த விவசாய சங்க தலைவரும் முனாள் சட்டமன்ற உறுப்பினருமான சுனிலம் உள்ளிட்ட ஏரளமாணவர்கள் கலந்து கொண்டனர்.

- கன்னியாகுமரி, சுயம்புலிங்கம்.

Loading...

suresh