மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் 21-வது மாநிலமாக இணைந்தது தமிழகம்

share on:
Classic

மத்திய அரசின் மின் சீரமைப்பு திட்டமான உதய் மின் திட்டத்தில் 21-வது மாநிலமாக தமிழகம் இணைந்தது.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சார்பில் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி கையெழுத்திட்டார். மத்திய அரசின் சார்பில் மத்திய மின்துறை அமைச்சர் பியூஸ் கோயல் கையெழுத்திட்டார். இதன்படி உதய் மின் திட்டத்தில் 21-வது மாநிலமாக தமிழகம் இணைந்தது.

காலாண்டுக்கு ஒருமுறை மின்கட்டணத்தில் மாறுதல் செய்யும் நிபந்தனையை மத்திய அரசு நீக்கியதால் ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டது. உதய் திட்டத்தில் இணைந்தால் அடுத்த 3 ஆண்டுகளில் மின் விநியோக நிறுவனங்களின் கடன் சுமையை நீக்க வழி ஏற்படுத்தப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

இந்த திட்டத்தால் தமிழ்நாடு ரூ.11,000 கோடி மதிப்பிலான ஒட்டுமொத்த நிகர பயன்களைப் பெறும். தமிழ்நாடு மின் உற்பத்தி விநியோக கழகத்தின் 75% கடனை தமிழக அரசே ஏற்கும்.

நாட்டிலுள்ள ஒவ்வொரு நுகர்வோருக்கும் பயனளிக்கும் வகையில் உதய் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் போன்ற சில மாநிலங்களைத் தவிர, மற்ற அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உதய் திட்டத்தில் நுகர்வோரை பாதிக்கும் ஒரு சிறிய அம்சம்கூட இடம்பெறவில்லை.

அதேசமயம் நுகர்வோரின் ஒவ்வொரு பைசாவையும் சேமிக்க இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.22,000 கோடி மக்கள் பணத்தை சேமிக்க முடியும் என்று மத்திய எரிசக்தி துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

Loading...

surya