மத்திய அரசு பீட்டாவின் சொல்லைக் கேட்டு நடக்கிறது - சீமான்

share on:
Classic

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் பேசியதாவது, “கால் நூற்றாண்டு காலம் சிறையில் வாடும் முருகன்,சாந்தன்,பேரறிவாளன்,நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு உடனே முன்வர வேண்டும். தைப்பூச தினத்தன்று தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும்.

காவிரி விவகாரத்தில் மேல்முறையீடு செய்யும் மத்திய அரசு ஏன் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய மறுக்கிறது?.

காளைகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜனநாயக அரசு சொல்வதை கேட்காமல் பீட்டாவின் சொல்லை கேட்டு மத்திய அரசு செயல்படுகிறது.

ஜல்லிக்கட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கும் வாய்ப்பு இல்லை. எனவே தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம். இதன் காரணமாக சிறை செல்லவும் தயார்.

காவிரி விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை மீறி கர்நாடக அரசு செயல்படுகிறது.

இதை அனுமதித்துள்ள மத்திய அரசு, தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவதையும் அனுமதிக்க வேண்டும்.” என்றார்.

Loading...

vaitheeswaran