மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய கூடாது: எதிர்க்கட்சிகள் போர்க்கொடி

share on:
Classic

5 மாநில தேர்தலுக்கு முன்பு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய கூடாது என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் இந்த தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
உத்தரபிரதேசம் சட்டசபைக்கு பிப்ரவரி 11 முதல் 7 கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதால், மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரை தள்ளிவைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

பட்ஜெட் கூட்டத் தொடரில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படும் என்பதால் இது தேர்தலை பாதிக்கும் என்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. ஆனால் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு முற்றிலும் நிராகரித்துள்ளது.

ஆண்டுதோறும் மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும் என்றும் அதனால் பட்ஜெட் கூட்டத்தொடரை தள்ளிப் போடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Loading...

surya