மருத்துவ நுழைவுத் தேர்வில் தமிழக மாணவர்கள் வெற்றி பெறுவது கடினம்

share on:
Classic

இந்தியாவில் நடத்தப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை அடிப்படையாக வைத்து நடத்தப்படுவதால், தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் இந்த தேர்வில் வெற்றி பெறுவது கடினம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான மத்திய அரசின் நீட் நுழைவுத்தேர்வு பற்றி மாணவர்களின் ஐயங்களும், குழப்பங்களும் இன்னும் தீரவில்லை என தெரிவித்தார்.

இந்நிலையில் குழப்பங்கள் தீர, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர வேண்டும் என தெரிவித்தார். மேலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளைப் போலவே நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் மருத்துவப் படிப்புக் கட்டணத்தையும் தமிழக அரசே நிர்ணயிக்க வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் நடத்தப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை அடிப்படையாக வைத்து நடத்தப்படுவதால், தமிழக மாணவர்கள் வெற்றி பெறுவது மிகவும் கடினம் என்றும் டாக்டர் ராமதாஸ், தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Loading...

surya