மறைந்த பஞ்சு அருணாச்சலம் அவர்களுக்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவித்த ரஜினி

share on:
Classic

மறைந்த திரைப்பட தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் அவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திரைத்துறையில் தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், வசனகர்த்தா, கதாசிரியர் என பல திறமைகளை கொண்ட பஞ்சு அருணாச்சலம் இருதய கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு திரை உலகினர் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தார்.

இதேபோல் திரைப்பட நடிகை ஜோதி லட்சுமியும் இரத்த புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று உயிரிழந்தார்.

ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் என மூன்று முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை பெற்றவர் ஜோதி லட்சுமி. இவருக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உட்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

Loading...

surya