மாடுகளுக்கு அடையாள அட்டை: மத்திய அரசு திட்டம்

share on:
Classic

மாடுகளுக்கு அடையாள அட்டை அளித்து காதுகளில் அடையாளம் பொறிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மனிதர்களுக்கு ஆதார் அடையாள அட்டை போன்று பசு மற்றும் எருமை மாடுகளுக்கும் அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.148 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது சுமார் 8.8 கோடி எருமை மற்றும் பசு மாடுகள் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பால் உற்பத்தியை மேம்படுத்தும் வகையிலும், எருமை மற்றும் பசு மாடுகளின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டும், அவைகளின் விவரங்கள் அடங்கிய அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளதாகவும், மத்திய விலங்குகள் நலத்துறை இப்பணியை மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாடுகளின் உரிமையாளர், அவரது முகவரி, மாடுகளின் இனம், இனப்பெருக்கம் உள்ளிட்ட விவரங்கள் அடையாள அட்டையில் இடபெறும். ஆதார் அடையாள அட்டையில் உள்ளதை போன்று 12 இலக்க எண்கள் இந்த அட்டையிலும் இருக்கும். இப்பணியை இந்தாண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Loading...

surya