மாண்டி கார்லோ டென்னிஸ் அரையிறுதியில் போபண்ணா ஜோடி

share on:
Classic

மாண்டி கார்லோ டென்னிஸ் தொடரில் இந்தியாவின் ரோகன் போபண்ணா இணை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

களிமண் தரையில் நடத்தப்படும் மாண்டி கார்லோ டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதிச் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, அர்ஜெண்டினாவின் பாப்லோ குவாஸ் இணை, ஃபின்லாந்தின் ஹென்றி, ஆஸ்திரேலியாவின் ஜான் பீர்ஸ் இணையை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தியது. இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 3க்கு 6 என போபண்ணா இணை தவறவிட்டது. பின், 2வது செட்டை 6க்கு3 என கைப்பற்றி போபண்ணா இணை ஆட்டத்தை சமன்படுத்தியது. 3வது செட்டில் இரு வீரர்களும் சமபலத்துடன் விளையாடினர். இருவரும் மாறி மாறி புள்ளிகளைக் குவிக்க அபாரமாக விளையாடிய போபண்ணா இணை 13க்கு11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

Loading...

vijay