மாண்டி கார்லோ டென்னிஸ் தொடரில் போபண்ணா இணை சாம்பியன்

share on:
Classic

மாண்டி கார்லோ டென்னிஸ் தொடரில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா இணை சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.

ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, அர்ஜெண்டினாவின் பாப்லோ குவாஸ் இணை, ஸ்பெயினின் ஃபெலிசியானோ லோப்ஸ், மார்க் லோப்ஸ் இணையை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தியது. தொடக்கம் முதலே வெற்றிக்கனியை பறிக்கும் முனைப்பில் இரு அணிகளும் விளையாடின. முதல் செட்டை 6க்கு3 என போபண்ணா இணை பெற, 2வது செட்டை 3க்கு 6 என லோப்ஸ் இணை கைப்பற்றியது. 

3வது செட்டில் இரு வீரர்களும் வெற்றிக்காக போராடியதில் அபாரமாக விளையாடிய போபண்ணா இணை அந்த செட்டை 10க்கு4 என கைப்பற்றி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. மாண்டி கார்லோ டென்னிஸ் தொடரில் இந்திய இணை வெற்றி பெறுவது இது 3வது முறையாகும். முன்னதாக, மகேஷ் பூபதி, லியாண்டர் பயஸ் ஆகியோர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Loading...

jagadish