மாண்டி கார்லோ டென்னிஸ்: 10வது முறையாக சாம்பியன் ஆனார் நடால்

share on:
Classic

மாண்டி கார்லோ டென்னிஸ் தொடரில் ஒற்றையர் பிரிவில் களிமண் நாயகன் ரஃபேல் நடால் 10வது முறையாக பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். 

ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் 9 முறை பட்டத்தை கைப்பற்றியுள்ள ஸ்பெயின் வீரர் களிமண் நாயகன் ரஃபேல் நடால், சக நாட்டு வீரரான ஆல்பர்ட் வினோலஸை எதிர்த்து விளையாடினார். வழக்கம் போல், களிமண் தரையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய நடால், வினோலசை புள்ளிகள் குவிக்க விடாமல் அபாரமாக விளையாடினார். 

இறுதியில் 6க்கு1, 6க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று மாண்டி கார்லோ தொடரில் 10 வது முறையாக சாம்பியன் பட்டத்தை தனதாக்கி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் நடால் 2 இடங்கள் முன்னேறி 5வது இடத்தில் உள்ளார்.

 

Loading...

jagadish