மாநிலங்களவை உறுப்பினராகிறார் இல.கணேசன்

share on:
Classic

பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருக்கும் இல.கணேசன் விரைவில் மாநிலங்களவை உறுப்பினராகிறார். இந்த தகவலை பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா இன்று உறுதிபடுத்தினார்.

மத்தியப்பிரதேசத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த நஜ்மா ஹெப்துல்லா தற்போது மணிப்பூரின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது இடத்தில் இல.கணேசன் போட்டியிட உள்ளார். இந்த பதவிக்கான தேர்தல் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இவர் எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், தமிழக பாஜகவில் உள்ள எம்பிக்களின் எண்ணிக்கை இரண்டாக உயரும்.

Loading...

vaitheeswaran