முகப்பேரில் இறகுப்பந்து உள்ளரங்கம் - அன்புமணி திறந்துவைத்தார்

share on:
Classic

சென்னையை அடுத்த முகப்பேரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பையர்பால் பாட்மிண்டன் அக்காடமியை தமிழ்நாடு இறகுப் பந்துக் கழகத் தலைவர் அன்புமணி ராமதாஸ் திறந்துவைத்தார்.

சர்வதேச அளவில் கட்டப்பட்டுள்ள இந்த அரங்கத்தைத் திறந்து வைத்த அவர், பின்னர் சிறப்புரை ஆற்றினார்.

அப்போது, மட்டைப்பந்துக்கு அடுத்து இறகுப்பந்து விளையாட்டு தான் இருப்பதாக தெரிவித்தார். இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இது போன்ற உள்ளரங்கம் அதிக அளவில் உருவாக்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பாக தமிழ்நாடு இறகுப்பந்து கழக தலைவர் என்ற முறையில் முதலமைச்சரை சந்திக்க உள்ளதாகவும் கூறினார்.

Loading...

vaitheeswaran