முகாந்திரம் இருந்தால் சுந்தர்.சி மீது வழக்கு பதிவு செய்யலாம் : உயர்நீதிமன்றம்

share on:
Classic

இயக்குனர் சுந்தர்.சிக்கு எதிரான மிரட்டல் புகார் குறித்து விசாரணை நடத்தி முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

கதாசிரியரும், நடிகருமான வேல்முருகன் உயர்நீதிமன்றத்தில் சுந்தர்.சி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி மனுதாக்கல் செய்தார். 

அதில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நெடுந்தொடர்க்கான கதையை தன்னிடம் வாங்கிய இயக்குனர் சுந்தர்.சி அதற்காக 50 லட்சம் ரூபாய் தருவதாக தெரிவித்து பின்னர் 4 லட்சம் ரூபாய் மட்டுமே தந்து விட்டு மீதி தொகையை கேட்டபோது  அதனை தர மறுத்ததாக குறிப்பிட்டுள்ளார். 

கதையின் உரிமை கோரி திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் இந்த வழக்கை திரும்ப பெற கோரி சுந்தர்.சி மற்றும் அவரின் ஆட்கள் மிரட்டியதாக கூறியுள்ளார். 

இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே சுந்தர்.சிக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனுதாக்கல் செய்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் வேல்முருகன் அளித்த புகாரை ஜெ.ஜெ. நகர் காவல்நிலைய ஆய்வாளர் முறையாக விசாரணை நடத்தி புகார் தொடர்பாக முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

News Counter: 
80
Loading...

Sathya