முதலமைச்சரின் உடல்நலக்குறைவு : சிபிஐ விசாரணை தேவை - சசிகலா புஷ்பா

share on:
Classic

முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எவ்வாறு உடல் நலக்குறைவு ஏற்பட்டது என்பது குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சசிகலா புஷ்பா எம்.பி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “ கடந்த இரண்டு, மூன்று நாட்களாக சசிகலாவை முன்னிறுத்துவது குறித்து செய்தி வெளியாகிறது. இது தவறு. தன்னை முன்னிறுத்துவது குறித்து சசிகலா மற்றவரை வைத்து செய்தி வெளியிடுகிறார்: எம் ஜி ஆரை போல் தற்போது இரண்டாம் கட்ட தலைவர்கள் அதிமுகவில் இல்லை. இதற்குக் காரணம் பின்னால் இருக்கும் கும்பல்.

முதலமைச்சர் உடல் நலம் தேற நாங்கள் பிராத்திக்கிறோம். முதலமைச்சருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதா? இல்லை பிறரால் ஏற்படுத்தப்பட்டதா? முதலமைச்சரின் உடல் நிலை குறித்து உண்மை நிலவரத்தை சொல்ல வேண்டும். அதிகாரிகள் முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டுமே தவிர தனி நபரின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது.

2001 ஆம் ஆண்டில் வெளியேற்றப்பட்ட சசிகலா தற்போது ஆட்சியை கைப்பற்ற மீண்டும் சதி திட்டம் தீட்டுகிறார். முதலமைச்சர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இருக்கும் போது அரசு அதிகாரிகளை இயக்குவது யார்? ” என்றும் கேள்வி எழுப்பினார்.

Loading...

vaitheeswaran