முதலமைச்சர் உடல்நிலை பற்றி விளக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

share on:
Classic

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த உண்மை நிலையை அறிவிக்க உத்தரவிட வேண்டும் என்றும், அவரது உடல்நலம் சரியாகும் வரை இடைக்கால முதலமைச்சர் ஒருவரை நியமிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இன்று இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி அக்டோபர் 6 ஆம் தேதிக்குள் விளக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

Loading...

vaitheeswaran