முதலமைச்சர் சொன்னால் ராஜினாமா செய்வேன் - சசிகலா புஷ்பா

share on:
Classic

தூத்துக்குடியில் வெங்கடேசப் பண்ணையாரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் சசிகலா புஷ்பா எம்.பி.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் நாடார் சமுதாயத்திற்கு இடஒதுக்கீட்டில் துரோகம் செய்யப்பட்டுள்ளது.

இதனை சட்டப்படி அணுகி தீர்வு காண்போம். தென்மாவட்டத்தில் தரம் இல்லாத தொழிற்சாலைகள் அமைத்ததால் விளைச்சல் முடக்கப்பட்டு விவசாயம் அழிந்துவிட்டது.

வருகின்ற நாடாளுமன்ற கூட்டுத்தொடரில் என் முதல் பேச்சு, மத்திய அரசு பாடப்புத்தகத்தில் நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தி எழுதிய வரிகளை நீக்குவது பற்றி தான் இருக்கும்.

முதலமைச்சர் கேட்டுக்கொண்டால் ராஜினாமா செய்வேன். முதலமைச்சருக்குப் பின்னால் இருந்துகொண்டு செயல்படும் கும்பல் மற்றும் குடும்பத்திற்காக ராஜினாமா செய்யமாட்டேன். அவர்களை அடையாளம் கண்டு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.

சேக்மதார், தூத்துக்குடி

Loading...

suresh