முதல்வரின் உடல்நிலை பற்றி அறியவே சென்னை வந்தேன் - ராகுல்காந்தி

share on:
Classic

உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி இன்று நேரில் விசாரித்தார்.

திடீர் பயணமாக சென்னை வந்த அவர், இன்று மதியம் 12.30 மணி அளவில் மருத்துவமனைக்குள் சென்றார். முதலமைச்சரின் உடல்நிலை குறித்து மருத்துவரிடம் விசாரித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். முதல்வரின் உடல்நிலை குறித்து அறியவே சென்னை வந்தேன்.

முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். அவர் விரைவில் குணமடைவார். அவருக்கு என் ஆதரவும், கட்சியின் ஆதரவும் உண்டு” என்றார்.

Loading...

vaitheeswaran