முன்னோர்கள் விட்டுச்சென்ற பொக்கிஷங்களை மீட்க ஒன்றிணைய வேண்டும்: சமுத்திரகனி

share on:
Classic

நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற பல பொக்கிஷங்களை நாம் காணாமல் போக செய்துவிட்டதாகவும், அதனை மீட்க அனைவரும் ஒன்றாக பாடுபட வேண்டும் என்று நடிகரும், இயக்குனருமான சமுத்திரகனி தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சியின் தூய்மை தூதுவர்கள் அறிமுக விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாநகராட்சி ஆணையாளர் அனீஸ்சேகர் தலைமை வகித்தார்.  பேராசிரியர் ஞானசம்பந்தம், இயக்குனர் சமுத்திரகனி, நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து, வானொலி பேச்சாளர் ரமணா ஆகியோர் தூய்மை தூதுவர்களாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். 

இந்த விழாவில் பேசிய இயக்குனர் சமுத்திரக்கனி, வரும் காலத்தில் உணவுக்காக தான் உலக சண்டை ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கூறுவதாக குறிப்பிட்டார். மேலும், முன்னோர்கள் விட்டுச்சென்ற பொக்கிஷங்களை மீட்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்தார். 

இதையடுத்து பேசிய மாநகராட்சி ஆணையர் அனீஸ்குமார், மாநகராட்சி முழுவதும் 50 மைக்ரான் அளவிற்கு கீழ் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்வதை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

News Point One: 
முன்னோர்கள் விட்டுச்சென்ற பொக்கிஷங்களை மீட்க ஒன்றிணைய வேண்டும்: சமுத்திரகனி
News Point Two: 
இயக்குனர் சமுத்திரகனி தூய்மை தூதுவராக அறிமுகம்
News Point Three: 
பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்வதை கண்காணிக்க குழு
News Counter: 
125
Loading...

Giri