மும்பை அணிக்கு எதிரான போட்டியில் புனே அணி வெற்றி

share on:
Classic

ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ரைசிங் புனே 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 28வது ஆட்டம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் ஆகிய அணிகளுக்கிடையே நேற்று இரவு நடைபெற்றது. இதில், டாஸ்வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய புனே அணி நிதானமாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்தது. புனே அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் ராகுல் திரிபாதி 45 மற்றும் அஜய் ரகானே 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 39 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இதையடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை, புனே அணி வெற்றி பெற்றது.

Loading...

vijay