முல்லைப் பெரியாறில் கேரள அரசு வாகன நிறுத்தம் அமைக்க இடைக்காலத் தடை | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புமுல்லைப் பெரியாறில் கேரள அரசு வாகன நிறுத்தம் அமைக்க இடைக்காலத் தடை

முல்லைப் பெரியாறில் கேரள அரசு வாகன நிறுத்தம் அமைக்க இடைக்காலத் தடை

December 04, 2017 265Views
முல்லைப் பெரியாறில் கேரள அரசு வாகன நிறுத்தம் அமைக்க இடைக்காலத் தடை

முல்லைப் பெரியாறில் கேரள அரசு வாகன நிறுத்தம் அமைக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின்  தேக்கடி ஆனைவாசல் பகுதியில்  வாகன நிறுத்தம் அமைக்கும் பணியில் கேரள அரசு ஈடுபட்டது. ஆனால், அந்த இடம் தமிழகத்திற்கு சொந்தமானது என சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.  

அந்த வழக்கு விசாரணையின் போது, முல்லைப்பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் தமிழகத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருப்பதால் அதில் கட்டுமானப் பணிகளை அனுமதிக்கக்கூடாது என்று தமிழக அரசு வாதிட்டது. 

இந்த வழக்கில் வாதங்களை கேட்ட தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், கேரள அரசு வாகன நிறுத்தம் அமைக்க, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது என்றும்,  இதனால் வன பாதுகாப்பு சட்டத்தில் அனுமதி பெற தேவையில்லை என்பதால், கேரள அரசு வாகன நிறுத்தம் அமைக்க தடையில்லை என்று கூறிய நீதிபதிகள் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர். 

ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது. அதனை ஏற்ற உச்சநீதிமன்றம், இன்று அவசர வழக்காக விசாரித்தது. அப்போது, முல்லை பெரியாறு அணை பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்தம் அமைப்பதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.