மோடியுடன் ட்ரம்ப் தொலைபேசியில் ஆலோசனை

share on:
Classic

பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியா உண்மையான நட்பு நாடு என குறிப்பிட்டு உள்ளார்.

அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த 20-ம் தேதி பதவியேற்றார். இந்தநிலையில், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதிபர் டிரம்ப் பேசி உள்ளார்.

அப்போது, இரு நாட்டு பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். மேலும் உலகில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் எதிர்கொள்ள இந்தியாவை நட்பு நாடாக கருதுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்க வருமாறு பிரதமர் மோடிக்கு, அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்தார்.

Loading...

jagadish