ரசிகர்களை மீண்டும் சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்

share on:
Classic

வரும் 26ஆம் தேதி முதல் 6 நாட்கள் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திக்க உள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது திருமண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை சந்திப்பு நடைபெறுகிறது. இந்த சந்திப்பில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரசிகர்கள் வீதம் சுமார் 6 ஆயிரம் ரசிகர்களை ரஜினி சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது அரசியல் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையிலும், 7 மணி முதல் மாலை 5 மணி வரை அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர்கள் மன்றம் சார்பில் போலீஸ் பாதுகாப்பு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

News Point One: 
வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார்
News Point Two: 
நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரசிகர்கள் வீதம் சுமார் 6 ஆயிரம் ரசிகர்களை ரஜினி சந்திக்க உள்ளார்
News Point Three: 
அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர்கள் மன்றம் சார்பில் போலீஸ் பாதுகாப்பு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது
News Counter: 
125
Loading...

vijay