ரசிகர் மரணம் : பவன்கல்யாண் நேரில் சென்று ஆறுதல்

share on:
Classic

நடிகர் பவன் கல்யாண் மற்றும் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் மோதலில் உயிர் இழுந்த வினோத் வீட்டிற்கு பவன்குமார் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

திருப்பதியை சேர்ந்த வினோத்குமார் தீவிர பவன்கல்யாண் ரசிகர். கடந்த 21 ஆம் தேதி அன்று கர்நாடக மாநிலம் கோலாரில் உடல் உறுப்புகள் தானம் செய்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இவரும், இவரது நண்பரும் சென்று பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சுமன் பங்கேற்றார். விழா மேடையில் பேசிய வினோத், ஆந்திராவிலும் இதே போன்று நடிகர் பவன் கல்யாண் ரசிகர்கள் மூலம் உடல் உறுப்புகள் தானம் செய்யப்படும் என்று கூறி, ஜெய் பவன்கல்யாண் என்று கத்தினார்.இதைப் பார்த்துக் கொண்டுருந்த ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்கள் சுனில், முக்கேஷ் ஆகியோர் வினோத்திடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

அன்று இரவு கோலார், நரசாபூரில் உள்ள ஒரு ஒட்டலில் தங்கிய போது, இருவருக்கும் மத்தியில் சண்டை ஏற்பட்டது. இதில் முகேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வினோத்தை குத்திக் கொலை செய்தார். ரத்த வெள்ளத்தில் சரிந்த வினோத்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பாதி வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து முகேஷை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் திருப்பதி வந்த நடிகரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன்கல்யாண் திருப்பதி எஸ்.டி.வி. நகரில் உள்ள வினோத் வீட்டிற்குச் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். ரசிகர்கள் தங்களது நாயகர்கள் மீது கொண்ட பாசத்தால், கொலை செய்யும் அளவிற்கு செல்வது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார். வினோத் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.பவன் கல்யாண் வருகையையொட்டி அங்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.

Loading...

vaitheeswaran