ரஜினிகாந்தை அசத்திய மோகன்லால் !

share on:
Classic

இளமை மற்றும் வயதான தோற்றங்களில் ஒடியன் மாணிக்கன் என்கிற மலையாள திரைப்படத்தில் பிளாக் மேஜிசியனாக நடித்து வருகிறார் மோகன்லால். 

மிகப்பெரிய ஆக்ஷன் படமாக உருவாக்கி வரும் இந்தப்படத்தை விளம்பரப்பட இயக்குனரான ஸ்ரீகுமார் மேனன் என்பவர் இயக்கி வருகிறார். இந்தப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இப்படத்தில் மோகன்லால் சுமார் 18 கிலோ எடை குறைத்து ஸ்லிம்மாக காணப்படுகிறார். இந்த இளம் வயது தோற்றத்தை கண்ட பலரும் மோகன்லாலை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இதன் டீசரை கண்ட நடிகர் ரஜினி காந்த் மோகன்லாலை புகழ்ந்து தள்ளியுள்ளார். அவரது நியூ கெட்டப்பை பார்த்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தை மோகன்லால் சொந்தமாகத் தயாரிக்கிறார். மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மோகன்லால் இதுவரை நடித்திராத வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார்.  'ஒடியன்' திரைப்படத்தை விளம்பரப் படங்கள் இயக்குநர் ஶ்ரீகுமார் மேனன் இயக்குகிறார். 

இப்படத்தின் டீசர் வீடியோ: 

 

News Counter: 
300
Loading...

sankaravadivu