ரஜினி அரசியலுக்கு வர இப்போது வாய்ப்பில்லை: சத்யநாராயண ராவ்

share on:
Classic

ரஜினி அரசியலுக்கு வருவதற்கான வழிகள் இப்போது இல்லை என அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார். 

கிருஷ்ணகிரியில் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில், ரஜினியின் 68-வது பிறந்த நாள் விழா நடந்தது. டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்களுக்கு நலத்திட்டம் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 

இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணராவ் பங்கேற்று, துப்புரவு பணியாளர் 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ரஜினிக்கு அரசியலுக்கு வரும் விருப்பம் உள்ளதாகவும், ஆனால் அதற்கான வழி இன்னும் வரவில்லை என கூறினார்.

News Point One: 
ரஜினி அரசியலுக்கு வர இப்போது வாய்ப்பில்லை: சத்யநாராயண ராவ்
News Point Two: 
ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது
News Point Three: 
ரஜினிக்கு அரசியலுக்கு வரும் விருப்பம் உள்ளது
News Counter: 
120
Loading...

Giri