ரஹானேவுக்கு 12 லட்ச ரூபாய் அபராதம்

Classic

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால், ராஜஸ்தான் கேப்டன் ரஹானேவுக்கு 12 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பட்லரின் அதிரடியால் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றது.

 முதலில் மும்பை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, ராஜஸ்தான் அணி வீரர்கள் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக புகார் எழுந்தது. 

இதனை நடுவர்கள் ஐபிஎல் நிர்வாகத்திடம் தெரிவித்தனர். இதனையடுத்து, பந்துவீச ராஜஸ்தான் வீரர்கள் அதிக நேரம் எடுத்துகொண்டதால் அந்த அணியின் கேப்டன் ரஹானேவிற்கு 12 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

News Counter: 
100

sankaravadivu