ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேருக்கு 20ம் தேதிவரை காவல் - மன்னார் நீதிமன்றம்

share on:
Classic

நடுக்கடலில் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 4 பேரையும் வரும் 20ஆம் தேதி வரை காவலில் வைக்க இலங்கையின் மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 4 பேரை அந்நாட்டு கடற்படையினர் கடந்த சனிக்கிழமை கைது செய்து, தலைமன்னார்போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர், மீனவர்கள் 4 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

விசாரணைக்குப் பின்னர், மீனவர்கள் 4 பேரையும் வரும் 20ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதேபோன்று, நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 6 பேர், யாழ்ப்பாணம் நீரியல் மீன்பிடித்திணைக்கள அதிகாரி முன்பு அந்நாட்டு கடற்படையினர் ஆஜர்படுத்தினர்.

இந்தநிலையில், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை போலீசார் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் இரண்டு படகுகளும் மீன்பிடி உபகரணங்களும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...

vaitheeswaran