ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவிக்க பிரதமருக்கு அதிகாரமில்லை : திருநாவுகரசர்

share on:
Classic

கருப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கைகளால் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திருநாவுக்கரசர், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவிக்க பிரதமருக்கு அதிகாரமில்லை என்றார்.

மேலும்ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே அதானி, அம்பானி உள்ளிட்ட பெரும் தொழிலதிபர்களுக்கு தெரிந்திருப்பதாகவும் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் இளங்கோவன், தங்கபாலு மற்றும் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Loading...

surya