ரூபாய் நோட்டு தடை: பாராளுமன்ற குழுவிடம் ரிசர்வ் வங்கி விளக்கம்

share on:
Classic

மத்திய அரசின் அறிவுரைக்கு பிறகே 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டது என்று பாராளுமன்ற குழுவிடம் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்து உள்ளது.

ரிசர்வ் வங்கி தரப்பில் 7 பக்கங்கள் கொண்ட குறிப்பை நேற்று பாராளுமன்ற நிதி குழுவுக்கு அனுப்பி வைககப்பட்டுள்ளது, அதில் 2016ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிய குறிப்பில் கள்ளநோட்டு, பயங்கரவாதத்துக்கு நிதி உதவி, கருப்பு பணம் ஆகிய 3 பெரும் பிரச்சினைகள் உள்ளதால் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நோட்டுகளை திரும்பப் பெறுவதற்குரிய நடவடிக்கை குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாக கூறப்பட்டிருந்து.

இதைத் தொடர்ந்து மறுநாளே ரிசர்வ் வங்கியின் மத்திய குழு கூடி மத்திய அரசின் அறிவுரை குறித்து பரிசீலனை செய்து உயர் மதிப்பிலான நோட்டுகளை திரும்பப் பெறலாம் என்ற பரிந்துரையை ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு தெரிவித்ததக கூறப்பட்டுள்ளது.

கருப்பு பணம், கள்ளநோட்டு, பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிப்பது ஆகிய பிரச்சினைகளை கையாளுவதில் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இது அரியதொரு வாய்ப்பாக அமைந்ததால் உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்று புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்ய பரிந்துரைக்கப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Loading...

surya