ரூபாய் நோட்டு விவகாரம் : மத்திய அரசைக் கண்டித்து ஆர்பாட்டம் - திருநாவுக்கரசர்

share on:
Classic

500 மற்றும்1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த மத்திய அரசைக் கண்டித்து, 21ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் 100வது பிறந்தநாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடப்பட்டது.

இதில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் குமரி ஆனந்தன், முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் விஜயதாரணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு இந்திராகாந்தியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், விவசாயிகள் தற்கொலை நாட்டில் அதிகரித்து விட்டதாகவும், இதற்கு மத்திய அரசு பொறுப்பேற்று 15 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

புழக்கத்தில் இருந்த 500 மற்றும்1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகளின் முன்பு 21ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தபோவதாகவும் அவர் தெரிவித்தார்.

Loading...

vaitheeswaran