ரூ.500, ரூ.1000 நோட்டு விவகாரம் : அடுத்தவாரம் விசாரணை - உச்சநீதிமன்றம்

share on:
Classic

மக்கள் அதிகம் பயன்படுத்தும் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி மூலம் மக்களிடைய உரையாற்றும்போது 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பதாக அறிவித்தார். நாடு முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த அறிவிப்பை எதிர்த்து சங்கர்லால் பாண்டே மற்றும் விவேக் நாராயணன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் நேற்று பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், விசாரணையை செவ்வாய்க் கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளது. இதனிடையே உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில் பணத்தை மதிப்பிழக்கச் செய்த அரசின் முடிவு மீது உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் முன்னர் மத்திய அரசின் கருத்துகளையும் கேட்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

Loading...

vaitheeswaran