லிச்சி பழத்தை உட்கொள்வதால் உயிருக்கு ஆபத்து

share on:
Classic

லிச்சி பழத்தை உட்கொள்வதால் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாக அமெரிக்க மற்றும் இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பீஹாரின் முசாபர்பூரில் 15 வயது குழந்தைகள் அண்மைக் காலகமாக உடல்நலக்குறைவுடன் காணப்படுவதும், சில குழந்தைகள் உயிரிழக்க நேரிடுவதும் தொடர்கதையாகி வருகிறது.

வெப்பம், ஈரப்பதம், பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால் தான் குழந்தைகள் உயிரிழப்பு ஏற்படுவதாக ஒரு காலத்தில் கருதப்பட்டாலும், நோய்க்கான முழு காரணிகளை கண்டறிவதற்கான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் வியாதி வருவதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் குழந்தைகள் லிச்சி பழங்களை சாப்பிட்டு, இரவு உணவுகளை தவிர்த்தது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தைகளின் குளுக்கோஸ் அளவு குறைந்து மூளைச்சாவு அடைவதோடு, கோமா நிலைக்கு செல்வதும் தெரிய வந்துள்ளது.

மேலும் லிச்சி பழங்களை உட்கொள்வதால் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக உலக சுகாதார இதழான லேன்செட் தெரிவித்துள்ளது.

Loading...

jagadish