வடபழனி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் நிதியுதவி

Classic

வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் தலா 1 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது.

சென்னை வடபழனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள், 2 பேத்திகள் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 8 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் காயமடைந்தவர்களை  மருத்துவமனையில் நேரில் சந்தித்து நிதியமைச்சர் ஜெயக்குமார் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர். அப்போது தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயம் அடைந்த 4 பேருக்கு தலா ரூபாய் 50 ஆயிரத்தையும் அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக கூறினார்.

 

Loading...

sankaravadivu