வட கொரிய ஏவுகணை சோதனைக்கு உலகநாடுகள் கண்டனம்

share on:
Classic

வட கொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைக்கு அமெரிக்காவும் ஜப்பானும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஜப்பான் கடலிலிருந்து 500 கிலோமீட்டர் தொலைவில், வட கொரியா ஏவுகனை சோதனை நடத்தியதாக, தென் கொரிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், அமெரிக்கா சென்றுள்ள ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, அங்கு அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை சந்தித்து பாதுகாப்பு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன்பின் இருவரும் கூட்டாக இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஷின்ஸோ அபே, வட கொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகக் கூறினார்.

இவரைத்தொடர்ந்து பேசிய ட்ரம்ப், ஜப்பானின் பின்புலத்தில் அமெரிக்க 100 சதவீதம் இருக்கும் என தெரிவித்தார்.

Loading...

jagadish