close
முகப்புவருமான வரி உச்சவரம்பு 3 லட்சம் ரூபாயாக உயர்வு?

வருமான வரி உச்சவரம்பு 3 லட்சம் ரூபாயாக உயர்வு?

January 10, 2018 162Views
வருமான வரி உச்சவரம்பு 3 லட்சம் ரூபாயாக உயர்வு?

வருமான வரி உச்ச வரம்புத்தொகை இரண்டரை லட்சத்திலிருந்து மூன்று லட்ச ரூபாயாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

2018-19ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் அடுத்த மாதம்  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில், தனி நபர் வருமான வரி உச்ச வரம்பில் சில திருத்தங்கள் மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

அதன்படி, ஆண்டிற்கு இரண்டரை லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் வரி கட்டத் தேவையில்லை என்ற நிலை மாறி, மூன்று லட்ச ரூபாய் வரை உச்சவரம்புத் தொகை உயர வாய்ப்பிருப்பதாக மத்திய நிதியமைச்சக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த புதிய திருத்தத்திற்காக பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாகவும், வரும் பட்ஜெட்டில் இதுகுறித்து இறுதி முடிவு மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்படுகிறது. கடந்த 2017-18ஆம் நிதியாண்டு பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பின் ஆரம்ப விகிதம் 10 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.