வான்கடே டெஸ்ட்: இங்கிலாந்து நல்ல துவக்கம்

share on:
Classic

வான்கடே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியில் அறிமுக வீரராகக் களமிறங்கிய ஜெனிங்ஸ் அரைசதம் கடந்தார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் நான்காவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதன்படி, தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய குக்-ஜெனிங்ஸ் ஜோடி, இங்கிலாந்து அணிக்கு நல்ல தொடக்கம் தந்தது. அரைசதத்தை நெருங்கிய குக் 46 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

மறுபுறம், நிலைத்து நின்று விளையாடிய ஜெனிங்ஸ் 65 ரன்கள் எடுத்து அரைசதம் கடந்தார். மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்திருந்தது.

Loading...

jagadish