வாழைப்பழத்தைக் கொண்டு நூதன முறையில் நேத்திகடன்

share on:
Classic

திண்டுக்கல் அருகே பெருமாள் கோயிலில் ஏராளமான வாழைப் பழங்களை சூறைவிட்டு பக்தர்கள் நூதன முறையில் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

வத்தலக்குண்டு அருகே உள்ள சேவுகம்பட்டி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த சோலைமலை அழகர் பெருமாள் கோயிலில், ஆண்டுதோறும் பொங்கல் விழாவை முன்னிட்டு, பக்தர்கள் நேர்த்தி கடனாக வாழைப்பழங்களை சூறை விடுவது வழக்கம்.

இதன்படி, இந்தாண்டு, பக்தர்கள் வாழைப்பழங்களை கூடைகளில் நிரப்பி, பூஜை செய்து, பின்னர், மேளதாளங்கள் முழங்க கோயிலுக்கு எடுத்து சென்றனர்.

கோயில் முன்பு அனைவரும் சிறப்பு வழிபாடு செய்த பின்னர், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என வாழைப்பழங்களை அள்ளி சூறைவிட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இது குறித்து விவசாயி கூறுகையில் தங்களது நிலங்களில் விவசாயம் செழிக்கவும் தண்ணீர் தட்டுப்பாட்டு நீங்கி பருவ மழை பெய்ய வேண்டியும் மேலும் திருமணம் தடை நீங்க, தொழில் சிறக்க, உள்ளிட்ட பல்வேறு நேர்த்தி கடனை செலுத்த வாழைப்பழங்களை கொண்டு வந்து நேர்த்தி கடனை செலுத்தினர்.

இதனையடுத்து இங்குள்ள காளியம்மன் கோவிலிலும் தங்களது கால்நடைகளை கொண்டு வந்து சிறப்பு அபிஹேகம் செய்து வழிபட்டனர். இந்த விழாவில் வத்தலக்குண்டு மற்றுமின்றி திண்டுக்கல், மதுரை, சென்னை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர்.

Loading...

jagadish