வாஷிங்டனில் ட்ரம்ப் எதிர்ப்பாளர்கள் போராட்டம்

share on:
Classic

டொனால்டு ட்ரம்ப் அதிபராக பதவியேற்றபோது நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களால் வாஷிங்டன் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதிவியேற்பதற்கு முன்பாகவும், பதவியேற்றதன் பின்னும் பல்வேறு தரப்பினர் கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டனர். குறிப்பாக பதவியேற்பு விழா நடைபெற்ற வாஷிங்டன் நகரில் ட்ரம்ப்பின் எதிர்ப்பாளர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.

அந்த ஆர்ப்பாட்டத்தில் ட்ரம்ப்பிற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டதோடு, விலை உயர்ந்த சொகுசு காரான லீமாவை எரித்து போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதன்பின், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் எரிந்துகொண்டிருந்த காரை பெரும் போராட்டத்திற்குப் பிறகு அனைத்தனர். இதையடுத்து, காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்கார்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதிபர் தேர்தலில் ஹிலாரியை வீழ்த்தி ட்ரம்ப் வெற்றி பெற்றதும் ஹிலாரியின் ஆதரவாளர்களாலும், மாணவர்களாலும் ட்ரம்ப்பிற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Loading...

jagadish