விக்ரம் நடிக்கும் "ஸ்கெட்ச்" திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

share on:
Classic

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம்-தமன்னா இணைந்து நடித்து வரும் ‘ஸ்கெட்ச்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது படத்தின் அனைத்துப் பணிகளும் விறு விறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

மிகப் பிரமாண்டமான படைப்பாக விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகியள்ள ஸ்கெட்ச் படம் அதிரடி ஆக்‌ஷன் படமாக தயாராகி உள்ளது. இந்நிலையில் ஜனவரி 14-பொங்கல் திரு நாளன்று படம் திரைக்கு வரும் என்று அதிகாரபூர்வமாக படக்குழு தெரிவித்துள்ளது.

கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் தயாரிக்கும் படம் “ ஸ்கெட்ச் “ இந்த படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஸ்ரீ பிரியங்கா நடிக்கிறார். இவர்களுடன் சூரி, ஆர்.கே. சுரேஷ், அருள் தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், ரவி கி‌ஷன், விஷ்வாந்த், மாலி ஆகியோர் நடிக்கிறார்கள்

 

News Counter: 
163
Loading...

sankaravadivu