விராட் கோலி பெற்றுள்ள பல்வேறு புதிய சாதனைகள்

share on:
Classic

வான்கடே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கெதிராக இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராத் கோலி 235 ரன்கள் எடுத்ததன் மூலம் பல்வேறு சாதனைகளுக்கும், பெருமைகளுக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் 224 என்ற அதிக ரன்கள் எடுத்திருந்த இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை கோலி முறியடித்தார். நடப்பு தொடரில் இதுவரை 640 ரன்கள் எடுத்துள்ள கோலி இங்கிலாந்து அணிக்கெதிரான ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன் எடுத்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.

ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 என மூன்று விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் 50 ரன்களுக்கு மேல் சராசரியை பெற்ற முதல் கிரிக்கெட் வீரர் என்ற புதிய சாதனையும் கோலியின் வசம் சென்றது. இந்தாண்டில் டெஸ்ட் போட்டிகளில் கோலியின் பேட்டிங் சாரசரி 65ஆக உள்ளது. இதன் மூலம், டான் பிராட்மேனுக்கு (Don bradman) அடுத்தபடியாக அதிக சராசரி கொண்ட இரண்டாவது வீரராக கோலி உருவெடுத்துள்ளார்.

ஓராண்டில் மூன்று இரட்டை சதங்களை விளாசிய ஒரே இந்திய வீரர் மற்றும் ஒரே ஆண்டில் 200 ரன்களுக்கு மேல் எடுத்துள்ள இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற சாதனையும் கோலியின் சாதனைப் பட்டியலில் இடம்பெற்றன. தொடர்ச்சியாக 3 டெஸ்ட் தொடர்களில் இரட்டை சதம் அடித்த 3வது வீரர் என்ற பெருமையும் கோலி வசம் சென்றது. மேலும், இந்திய வீரர் ஒருவர் ஒரே டெஸ்ட் தொடரில் 600 ரன்களுக்கு மேல் எடுப்பது இது 7வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

surya