விஷாலுக்கு எதிராக நடந்த உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புவிஷாலுக்கு எதிராக நடந்த உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்

விஷாலுக்கு எதிராக நடந்த உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்

December 06, 2017 116Views
விஷாலுக்கு எதிராக நடந்த உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்

தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் விஷாலுக்கு எதிரான சேரனின் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து விஷால் விலக வேண்டும் என்று கூறி தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் இயக்குநர் சேரன் உள்ளிட் பலர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். 

தயாரிப்பாளர்  சங்க தேர்தலில் விஷால் போட்டியிட்டு வெற்றி பெற்று 8 மாதங்கள் ஆகியும் இது வரை எந்த நன்மையையும் செய்யாத நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், விஷால் போட்டியிட வேண்டுமா என சேரன் கேள்வி எழுப்பி இருந்தார். 

நேற்று மாலை முதல் நடைபெற்று வரும் இந்த உள்ளிருப்பு போராட்டத்துக்கு நடிகர் ராதாரவி, நடிகை ராதிகா, இயக்குநர்கள் டி.ராஜேந்தர், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆதரவு தெரிவித்திருந்தனர். 

இந்த நிலையில் நடிகர் விஷாலின் மனு தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, இயக்குநர் சேரன் உள்ளிட்டவர்கள் தங்களுடைய உள்ளிருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.