close
முகப்புவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட்

January 12, 2018 356Views
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட்

இஸ்ரோ தயாரித்துள்ள 100-வது செயற்கைகோள் உள்பட மொத்தம் 31 செயற்கைகோள்களை சுமந்துகொண்டு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட்.

இஸ்ரோ அனுப்பும் பிஎஸ்எல்வி சி 40 ராக்கெட்டில் அமெரிக்கா, லண்டன், கனடா, தென்கொரியா, பின்லாந்த், பிரான்ஸ் உள்ளிட்ட 28 வெளிநாடுகளின் செயற்கைக்கோள்கள் இடம் பெறுகின்றன. 

இந்தியாவின் 710 கிலோ எடைகொண்ட கார்டோசாட் ட்டூ செயற்கைக்கோள், 100 கிலோ எடைகொண்ட மைக்ரோ செயற்கைகோள், 5 கிலோ எடைகொண்ட நானோ செயற்கைகோள் ஆகிய மூன்று செயற்கைகோள்கள் என மொத்தம் 31 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இதில் மைக்ரோ சேட்டிலைட் இந்தியாவின் 100-வது செயற்கைகோள் ஆகும். இது 2018-ம் ஆண்டில் இந்தியா விண்ணில் செலுத்தும் முதல் செயற்கைகோள் இதுவாகும்.